கடற்கரை செயற்கை மணல் பரப்பில் மத்திய மந்திரி ஆய்வு


கடற்கரை செயற்கை மணல் பரப்பில்    மத்திய மந்திரி ஆய்வு
x

புதுவை கடற்கரையில் உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பினை காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி
புதுவை கடற்கரையில் உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பினை காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் ஆய்வு செய்தார்.

செயற்கை மணல் பரப்பு

புதுவை கடற்கரையில் முன்பு இயற்கை அழகுடன் கூடிய மணல்பரப்பு இருந்தது. நாளடைவில் அது மறைந்து கடல் அரிப்பு ஏற்பட்டது. கடல் அரிப்பினை தடுக்க கடற்கரையில் பாறாங்கற்கள் கொட்டப்பட்டன.
அதன்பின்   மீண்டும் செயற்கை முறையில் மணல் பரப்பினை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 
இதைத்தொடர்ந்து தலைமை செயலகம் எதிரே கடலில் 975 டன் எடையுள்ள இரும்பு மிதவை வைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த பணிகள் சுமார் ரூ.24 கோடி செலவில் நடந்தது.

சாகர் மாலா

அதுமட்டுமின்றி மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ் துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்பட்டு அதில் அள்ளப்படும் மணலும் ராட்சத குழாய்கள் மூலம் பழைய துறைமுகம், காந்தி சிலை இடையே கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது கடற்கரையில் மணல் பரப்பு உருவாகியுள்ளது.
புதுவை வரும்   சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தற்போது கடலில் இறங்கி விளையாட தொடங்கியுள்ளனர். மணல் நிறைந்த  கடற் கரையாகவும் புதுவை கடற்கரை மாறி வருகிறது.

மத்திய மந்திரி ஆய்வு

இந்தநிலையில் புதுவை கடற்கரையில் செய்யப்பட்டுள்ள பணிகள்     குறித்து மத்திய புவி அறிவியல் துணை மந்திரி ஜிதேந்திர சிங்  காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புதுவை சுற்றுச் சூழல்துறை செயலாளர் ஸ்மிதா, தேசியகடல் தொழில்நுட்ப கழக அறிவியல் அதிகாரி சுரேஷ், விஞ்ஞானிகள் பனிக்குமார், முல்லைவேந்தன், ராம்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மணல் பரப்பினை காணொலிக்காட்சி மூலம் பார்த்த மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Next Story