மாநில செய்திகள்

ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு + "||" + The new judges of the ICC will take office tomorrow

ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு

ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு
ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு.
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது, தலைமை நீதிபதியுடன் சேர்த்து 56 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் பணிமாறுதலாகி செல்லும்பட்சத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 55 ஆக குறையும்.


இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளாக சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த 4 புதிய நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பின்னர், புதிய நீதிபதிகளை, அட்வகேட் ஜெனரல் மற்றும் வக்கீல் சங்கங்களின் பிரதிநிதிகள் வரவேற்று பேச உள்ளனர். பின்பு புதிய நீதிபதிகள் நன்றி தெரிவித்து பேசுவார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. ‘ஆயுள் முழுவதும் அனுபவிப்பதுதான் ஆயுள் தண்டனை’ கைதியின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
‘ஆயுள் முழுவதும் அனுபவிப்பதுதான் ஆயுள் தண்டனை’ கைதியின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
3. சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
உச்சத்தில் உள்ள தக்காளி விலையை குறைப்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வரும் தக்காளிகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்கு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவன் கல்வி கற்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
நீலகிரியில் குலதெய்வ கோவிலுக்கு பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.