மாநில செய்திகள்

ஆந்திராவில் பெண் பயங்கரவாதி ஆயுதங்களுடன் போலீசில் சரண் + "||" + Female terrorist Surrendered to police in Andhra

ஆந்திராவில் பெண் பயங்கரவாதி ஆயுதங்களுடன் போலீசில் சரண்

ஆந்திராவில் பெண் பயங்கரவாதி ஆயுதங்களுடன் போலீசில் சரண்
ஆந்திராவில் மாவோயிஸ்ட் அமைப்பச் சேர்ந்த பெண் பயங்கரவாதி ஒருவர், ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தார்.
ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பில் இருந்து ஸ்வேதா என்ற பெண் வெளியேறியுள்ளார். அவர் விசாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணாராவ் முன்னிலையில் போலீசாரிடம் சரணடைந்தார். துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார்.

மாவோயிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன் என்பவர் இறந்ததை தொடர்ந்து, தான் சரணடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது சரணடைந்துள்ள ஸ்வேதா மீது 6 கொலை வழக்குகள் உள்பட 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவரை பிடித்துக் கொடுத்தால் 4 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலி: 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்
ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலியானதுடன், 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஆந்திராவில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு - 17 பேர் மாயம்
ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 17 பேர் கதி என்ன? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
3. ஆந்திராவில் கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பு : 17 பேர் பலி; 30 பேர் மாயம்
அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திரா நோக்கி திரும்பியதால் அங்கு கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. 17 பேர் பலியாகி உள்ளனர்
4. ஆந்திராவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு இல்லை - மாநில அரசு முடிவு
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு குறைப்பு இல்லை என மாநில அரசு முடிவு செய்துள்ளது.
5. ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; ஜனாதிபதியை சந்தித்து சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.