விபத்தில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி-மு.க.ஸ்டாலின் உத்தரவு


விபத்தில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி-மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 19 Oct 2021 3:14 PM GMT (Updated: 19 Oct 2021 3:14 PM GMT)

சாலையை கடக்கும் போது கார் மோதிய விபத்தில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வண்டலூர் வயர்லஸ் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக (தொழில் நுட்பம்) பணிபுரிந்து வந்த டி.பிரசன்னா (வயது 26) 18-10-2021 அன்று இரவு 8 மணியளவில் தமிழ்நாடு காவல்துறை தலைமையிடத்தில் இருந்து காமராஜர் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) டி.பிரசன்னா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story