மாநில செய்திகள்

கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை + "||" + Sexual harassment of a girl who went to cricket practice

கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை

கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை
கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, அக்.20-
புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மையம் உள்ளது. இங்கு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். சோரப்பட்டை சேர்ந்த தாமரைக்கண்ணன்  பயிற்சியாளராக உள்ளார். இவர், கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. 
இது குறித்த அந்த சிறுமி அங்குள்ள நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதார். பின்னர் இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.