நில உரிமை மறுக்கப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு


நில உரிமை மறுக்கப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு
x
தினத்தந்தி 19 Oct 2021 11:13 PM GMT (Updated: 19 Oct 2021 11:13 PM GMT)

நில உரிமை மறுக்கப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதியில், நீண்டகாலமாக அனுபவித்து வருகிற சொத்தின் மீதான நில உரிமை மறுக்கப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக குழு அனுப்பப்படுகிறது.

இந்த குழுவில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணை தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா எஸ்.விஜயதரணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜே.ஜி.பிரின்ஸ், ஆர்.கணேஷ் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர், வரும் நவம்பர் 7-ந்தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு சென்று, அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிவர். இந்த ஆய்வு குறித்த தகவல்களை அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story