மாநில செய்திகள்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Heavy rain forecast for most districts in Tamil Nadu today and tomorrow

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தென் மேற்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் இருக்கும் நேரத்தில், தென் இந்திய பகுதிகளில் பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. அதிலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்கிறது.


அதன் தொடர்ச்சியாக தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 23-ந் தேதி (சனிக்கிழமை) வரை சில இடங்களில் கனமழையும், அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை

அதன்படி இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனேக இடங்களில்...

நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

23-ந் தேதி (சனிக்கிழமை) வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘திருபுவனம் 7 செ.மீ., கிளநிலை 4 செ.மீ., நாமக்கல் 3 செ.மீ., வீரகனூர் அணைக்கட்டு, அறந்தாங்கி, சின்னக்கல்லாறு, வால்பாறை, சின்கோனா, ஜெயங்கொண்டம் தலா 2 செ.மீ. மழை பெய்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி விரைவில் திறக்கப்பட உள்ளன. திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
3. குளித்தலை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவத்துறை குழுவினர் ஆய்வு
குளித்தலை அரசு மருத்துவமனை தரம் குறித்து தேசிய மருத்துவத்துறை குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
4. சோழவந்தான் பகுதியில் திட்டப்பணிகள் -பேரூராட்சிகள் ஆணையர் ஆய்வு
சோழவந்தான் பகுதியில் திட்டப்பணிகளை பேரூராட்சிகள் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
5. சாத்தியார் அணையை எம்.எல்.ஏ. ஆய்வு
சாத்தியார் அணையை வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.