மாநில செய்திகள்

கவர்னரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி + "||" + Edappadi Palanisamy meets the Governor today

கவர்னரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

கவர்னரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார்.
சென்னை,

தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி அண்மையில் பொறுப்பேற்றார். 

இந்த நிலையில் கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரை இன்று தனியாக சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பானது இன்று காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் செல்ல உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் நேரில் அஞ்சலி
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
2. ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது சட்டசபையில் கவர்னர் உரை
ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்று சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
3. எட்டயபுரம் மணிமண்டபத்தில் பாரதியார் சிலைக்கு கவர்னர் மரியாதை
எட்டயபுரம் மணிமண்டபத்தில் பாரதியார் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
4. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
5. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கவர்னர் தரிசனம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சென்றிருந்தார்.