பெட்ரோலை தொடர்ந்து ஒரு லிட்டர் டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்குகிறது


பெட்ரோலை தொடர்ந்து ஒரு லிட்டர் டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்குகிறது
x
தினத்தந்தி 20 Oct 2021 11:24 PM GMT (Updated: 20 Oct 2021 11:24 PM GMT)

பெட்ரோலை தொடர்ந்து ஒரு லிட்டர் டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்குகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்ற படிக்கட்டில் ஏறி பயணம் செய்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல் விலையை பொறுத்தவரையில், கடந்த ஜூலை 2-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்த நிலையில் தொடர்ந்து அதிகரித்து வந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து சற்று குறைந்து காணப்பட்டது.

அதன்பின்னர், கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கி, தற்போது வரலாறு காணாத உச்சத்தில் அதன் விலை இருக்கிறது. நேற்று, பெட்ரோல் லிட்டருக்கு 30 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 103 ரூபாய் 31 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோலை தொடர்ந்து, சென்னையில் டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்குகிறது. சில மாவட்டங்களில் ஏற்கனவே டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. பெட்ரோலை விட டீசல் தான் அதிகளவில் உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் டீசல் லிட்டருக்கு 34 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 99 ரூபாய் 26 காசுக்கு விற்பனை ஆனது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 73 காசும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் 52 காசும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story