மாநில செய்திகள்

சென்னையில் 100-ரூபாயை நெருங்கியது டீசல் விலை! + "||" + Diesel price in Chennai is close to 100 rupees!

சென்னையில் 100-ரூபாயை நெருங்கியது டீசல் விலை!

சென்னையில் 100-ரூபாயை நெருங்கியது டீசல் விலை!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.  கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வந்த நிலையில்,  நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.61-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.56 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.103.92-க்கும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிது ரூ.99.92-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 32-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’
சென்னை-பெங்கால் இடையேயான கால்பந்து போட்டி சமனில் முடிந்தது.
4. சென்னையில் மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
5. தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
சென்னையில் தொடர் மழையால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.