மாநில செய்திகள்

குடிபோதையில் தகராறு கிரிக்கெட் மட்டையால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி + "||" + The wife who killed the driver by hitting him with a cricket bat in a drunken brawl

குடிபோதையில் தகராறு கிரிக்கெட் மட்டையால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி

குடிபோதையில் தகராறு கிரிக்கெட் மட்டையால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி
குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்ற அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 45). இவருடைய மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 9 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர். டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், மது போதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜாராம் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்

இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையால் ராஜாராம் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜாராம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேவதியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழில் அதிபர் படுகாயம் தற்கொலை முயற்சியா? போலீசார் விசாரணை
துப்பாக்கி குண்டு பாய்ந்து சென்னையில் தொழில் அதிபர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்கொலை முயற்சி செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியை போலீசார் கைது செய்தனர்.
3. குழந்தையை ரூ.2½ லட்சத்துக்கு விற்ற தாய் - பணத்தை பறித்துச்சென்ற ரவுடிகளுக்கு போலீசார் வலைவீச்சு
சென்னையில் பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ரூ.2½ லட்சத்துக்கு விற்கப்பட்டது. அந்த பணத்தை குழந்தையின் தாயிடம் இருந்து பறித்து சென்ற ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
4. காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது
காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
5. திரிபுரா தேர்தல் வன்முறை; 98 பேர் கைது
திரிபுராவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் 98 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.