மானூர் ஒன்றியக்குழு தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு


மானூர் ஒன்றியக்குழு தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு
x
தினத்தந்தி 22 Oct 2021 8:57 PM GMT (Updated: 22 Oct 2021 8:57 PM GMT)

மானூர் யூனியன் தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு செய்யப்பட்டார். விக்கிரவாண்டி யில் கல்லூரி மாணவி தலைவர் ஆனார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மானூர் யூனியனில் உள்ள 25 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த 16 பேரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேரும், அ.ம.மு.க., பா.ஜ.க.வைச் சேர்ந்த தலா ஒருவரும், சுயேச்சைகள் 4 பேரும் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர்.

இதில் 19-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த 22 வயதான பெண் என்ஜினீயர் ஸ்ரீலேகா வெற்றி பெற்றார். இவருடைய தந்தை அன்பழகன், மானூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார்.

போட்டியின்றி தேர்வு

இந்த நிலையில் மானூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான முறைமுக தேர்தல் நடந்தது. இளம் வயதிலேயே ஒன்றிய கவுன்சிலராக வென்ற ஸ்ரீலேகா, மானூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஸ்ரீலேகா போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த பாடுபடுவேன் என்றார்.

விக்கிரவாண்டியில்...

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி சங்கீதா அரசி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அவர் நடப்பு கல்வி ஆண்டு இறுதியில் தான் பி.எஸ்.சி. கணிதம் படித்து முடித்தார்.

Next Story