நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து பயிற்சி


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 22 Oct 2021 11:23 PM GMT (Updated: 22 Oct 2021 11:23 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து பயிற்சி மாநில தேர்தல் ஆணையத்தில் நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள பகுதிகளில் வார்டு வாரியாக புகைப்பட வாக்காளர் பட்டியலை சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் படி தயார் செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், மாநில அளவில் முதன்மை பயிற்றுனர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் நடந்தது.

மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய தகவலியல் மைய அலுவலர்களால் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். இதில், முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) அருண்மணி, முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) கு.தனலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story