மாநில செய்திகள்

அரசுப் பேருந்தில் ஏறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு! + "||" + CM MK Stalin inspects state bus in Kannagi Nagar

அரசுப் பேருந்தில் ஏறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!

அரசுப் பேருந்தில் ஏறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!
சென்னை கண்ணகி நகர் பகுதியில் அரசுப் பேருந்தில் ஏறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை, 

தியாகராய நகர் - கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் எறிய, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா, கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என்று மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு உள்ளது, இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். முன்னதாக சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார். பின்னர் சென்னை எழில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அங்கு பணியாற்றி வந்த சுகாதாரத்துறை ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது முதல்-அமைச்சருடன் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
2. தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
சென்னையில் தொடர் மழையால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
3. சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...!!
சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
4. சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!!
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
5. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைவு
ஒரு கிராம் தங்கம் இன்று ரூ 4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.