மாநில செய்திகள்

மசாஜ் சென்டர்களில் விபசாரம்போலீஸ் விசாரணையால் முக்கிய பிரமுகர்கள் கலக்கம் + "||" + Leading figures are upset by the ongoing investigation into the girl's involvement in prostitution at massage centers.

மசாஜ் சென்டர்களில் விபசாரம்போலீஸ் விசாரணையால் முக்கிய பிரமுகர்கள் கலக்கம்

மசாஜ் சென்டர்களில் விபசாரம்போலீஸ் விசாரணையால் முக்கிய பிரமுகர்கள் கலக்கம்
மசாஜ் சென்டர்களில் நடந்த விபசாரத்தில் சிறுமி ஈடுபடுத்தப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் விசாரணையால் முக்கிய பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரி
மசாஜ் சென்டர்களில் நடந்த விபசாரத்தில் சிறுமி ஈடுபடுத்தப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் விசாரணையால் முக்கிய பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஸ்பாவில் விபசாரம்

சுற்றுலா நகரமான புதுச் சேரியில் விபசாரம் கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக அழகுநிலையம்,     மசாஜ் சென்டர் (ஸ்பா) என்ற பெயரில் விபசார தொழில் நடந்து வருகிறது. இந்த தொழிலில் வெளிமாநில அழகிகளோடு, உள்ளூர் பெண்களையும் ஈடுபடுத்தி வருகின்றனர். சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த விபசாரத்தில் உள்ளூர் முக்கிய பிரமுகர்களும் வாடிக்கையாளாராகி உள்ளனர்.

சிறுமி

இந்த விவகாரம் வெளியே வர தொடங்கிய நிலையில் புதுவை போலீசார் சமீபத்தில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாநகர், கோரிமேடு பகுதிகளில் ஸ்பா என்ற பெயரில் விபசாரம் நடப்பது உறுதியானது. அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் மீட்டனர். இதனிடையே அண்ணாநகர் பகுதியில் உள்ள ஸ்பாவில் சிறுமி ஒருவள் விபசாரத்தில் தள்ளப்பட்டது தெரியவந்தது.

முக்கிய பிரமுகர்கள் கலக்கம்

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு      செய்து உருளையன்பேட்டை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். போலீசாரின் கையில் தற்போது அந்த ஸ்பாவுக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின்         பட்டியல் செல்போன் எண் களுடன் கிடைத்துள்ளது.
அவற்றின் மூலம் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் யார் யார்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அதில் புதுச்சேரியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின்   பெயரும் உள்ளதாக  கூறப்படுகிறது. இதனால் அந்த ஸ்பாவுக்கு சென்று வந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.