தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது மகிழ்ச்சி - ரஜினிகாந்த் பேட்டி


தாதா சாகேப் பால்கே  விருது வாங்குவது மகிழ்ச்சி - ரஜினிகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2021 4:40 AM GMT (Updated: 24 Oct 2021 5:20 AM GMT)

மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை,

உலக சினிமாவின் உயரிய விருதாக ஆஸ்கர் இருப்பது போன்று, இந்திய சினிமாவின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து சிவாஜியும், கே.பாலச்சந்தரும் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் வருகிற 25ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில்  சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது.விருது வாங்குவேன் என எதிர்பார்க்கவில்லை. மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றார்.

Next Story