மாநில செய்திகள்

தென்மாவட்ட ரெயில்களின் நேரம் 1-ந் தேதி முதல் மாற்றம் + "||" + Time change of Southern District trains from 1st Nov.

தென்மாவட்ட ரெயில்களின் நேரம் 1-ந் தேதி முதல் மாற்றம்

தென்மாவட்ட ரெயில்களின் நேரம் 1-ந் தேதி முதல் மாற்றம்
மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் நேரம் வருகிற 1-ந் தேதி முதல் மாற்றப்படுகிறது.
மதுரை, 

மதுரை கோட்ட ரெயில்வேயில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் நேரத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது மேலும் சில ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 1-ந் தேதி முதல் புனலூர்-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.06730) விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படும். சென்னை-கொல்லம் சிறப்பு ரெயில் (வ.எண்.06101) திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.05 மணிக்கும், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லம்-சென்னை சிறப்பு ரெயில் (வ.எண்.06102) திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். கோவை-நாகர்கோவில் நள்ளிரவு சிறப்பு ரெயில் (வ.எண்.02668) மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கும், விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கும் புறப்படும்.

மதுரை-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06655) வருகிற 4-ந் தேதி முதல் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கும், சூடியூரில் இருந்து இரவு 7.25 மணிக்கும், பரமக்குடியில் இருந்து இரவு 7.40 மணிக்கும், சத்திரக்குடியில் இருந்து இரவு 7.56 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கும், உச்சிப்புளியில் இருந்து இரவு 8.32 மணிக்கும், மண்டபத்தில் இருந்து இரவு 8.52 மணிக்கும், பாம்பனில் இருந்து இரவு 9.10 மணிக்கும் புறப்படும். இரவு 10.10 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

புவனேசுவர்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண்.08496) மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கும், பரமக்குடியில் இருந்து இரவு 7.25 மணிக்கும், ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.55 மணிக்கும் புறப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை கோட்டத்தில் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்
மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரத்தில் வருகிற 1-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.