மாநில செய்திகள்

பஸ்களுக்கு இடையே கைக்குழந்தையுடன் சிக்கி உயிர் தப்பிய தம்பதிசமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ + "||" + The video of the couple surviving trapped with their infant between buses is currently going viral on social media sites.

பஸ்களுக்கு இடையே கைக்குழந்தையுடன் சிக்கி உயிர் தப்பிய தம்பதிசமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ

பஸ்களுக்கு இடையே கைக்குழந்தையுடன் சிக்கி உயிர் தப்பிய தம்பதிசமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ
பஸ்களுக்கு இடையே கைக்குழந்தையுடன் சிக்கி உயிர் தப்பிய தம்பதி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டப்பாக்கம்
புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரையை சேர்ந்த கணவன்-மனைவி தனது கைக்குழந்தையுடன் நேற்று  காலை புதுவைக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். கல்மண்டபம் என்ற இடத்தில் முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்த முயன்றனர். அப்போது எதிர்புறம் ஒரு பஸ் வந்தது.
இந்த 2 பஸ்களுக்கும் இடையில் ஸ்கூட்டருடன் தம்பதியர் சிக்கிக் கொண்டனர். இதை சைடு கண்ணாடியில் பார்த்த 2 பஸ் டிரைவர்களும் உடனடியாக பஸ்சை நிறுத்தினர். இருப்பினும் ஒரு பஸ்சின் மீது மோதி ஸ்கூட்டர் நின்றது. 
தக்க சமயத்தில் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தியதால் இடிபாடுகளுக்குள் சிக்கிய தம்பதியர் நூல் இழையில் உயிர் தப்பினர். அப்போது ஸ்கூட்டரில் வந்த பெண் தனது கணவரை வசைபாடினார்.
இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.