மாநில செய்திகள்

நவம்பர் 1 ஆம் தேதி முதல் கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி + "||" + Schools will definitely be open for grades 1 to 8 from November 1st minister AnbilMahesh

நவம்பர் 1 ஆம் தேதி முதல் கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நவம்பர் 1 ஆம் தேதி முதல் கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் 1.5 லட்சம் பேர் பதிவு செய்வர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும். 

கொரோனா 3 ஆம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.