தேர்தல் அதிகாரி காரை முற்றுகையிட்டு போராட்டம்: அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது


தேர்தல் அதிகாரி காரை முற்றுகையிட்டு போராட்டம்: அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2021 6:41 AM GMT (Updated: 2021-10-25T12:11:13+05:30)

மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் கடந்த 22ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மந்த்ராச்சலம், தேர்தலை தள்ளி வைத்தார்

கரூர்

கரூரில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை தள்ளி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர் உட்பட 4 பேரை போலீசார் அதிகாலையில் கைது செய்தனர்.

மாவட்ட ஊராட்சி  துணை தலைவர் தேர்தல் கடந்த 22ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மந்த்ராச்சலம், தேர்தலை தள்ளி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்  திரு.வி.க, உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 18 பேர் மீது  6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க மற்றும் அவரது மகன் தமிழ் செல்வன் உள்ளிட்ட 4 பேரை தான்தோன்றிமலை போலீசார் அதிகாலையில் கைது செய்தனர். 


Next Story