தமிழகத்தில் 7-ம் கட்ட தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் 7-ம் கட்ட தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 26 Oct 2021 9:23 AM GMT (Updated: 26 Oct 2021 9:23 AM GMT)

தமிழகத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி 7-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகமெங்கும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தமிழகம் முழுவதும் 6 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. 

அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அசைவம் சாப்பிடக்கூடாது என வதந்தி பரவி வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் சாப்பிடிவோர் மற்றும் மதுப்பிரியர்களுக்காக கடந்த வாரம் முதல் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அடுத்தக்கட்ட தடுப்பூசி முகாம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,“தமிழகத்தில் 7-ம் கட்ட தடுப்பூசி முகாம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி(சனிக்கிழமை) அன்று நடத்தப்படும். மேலும், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள்தான் இரண்டாம் கட்ட கோவேக்ஸின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.

Next Story