மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சவுந்தர்யா + "||" + Saundarya met and greeted Cheif Minister Stalin in person

முதல்-அமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சவுந்தர்யா

முதல்-அமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சவுந்தர்யா
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
சென்னை,

ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா விசாகன், அம்டெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சன்னி போகலாவுடன் இணைந்து நிறுவியுள்ள "ஹூட்" என்ற குரல் அடிப்படையிலான செயலியை கடந்த திங்கட்கிழமை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார். 

எழுத படிக்க தெரியாதவர்கள் கூட இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

ஹூட் செயலியின் அறிமுக விழாவில் பேசிய சவுந்தர்யா, கிளப் ஹவுஸ், டுவிட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் சவுந்தர்யா. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், 'மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ஹூட் செயலி பற்றி விவரித்து, அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீதிபதி காரை தடுப்பு போட்டு மறித்ததுபோல முதல்-அமைச்சர், அமைச்சர்களின் கார்களை போலீசார் தடுத்து நிறுத்துவார்களா? ஐகோர்ட்டு கேள்வி
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக நீதிபதியின் காரை தடுப்பு போட்டு மறித்ததுபோல, முதல்-அமைச்சர், அமைச்சர்களின் கார்களை போலீசார் தடுத்து நிறுத்துவார்களா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2. பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய மு.க.ஸ்டாலின்!
ஆட்சி பொறுப்பை ஏற்று 100 நாட்கள் ஆன நிலையில், பல வரலாற்று சிறப்பு மிகுந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருந்தாலும், தந்தை பெரியார், தன் இறுதி காலத்தில் நடத்திய போராட்டத்துக்கு ஒரு விடிவை கண்டிருக்கிறார்.
3. முதல்-அமைச்சர் கார் முன்பு திடீரென்று அமர்ந்து போராட்டம் தலைமைச்செயலகத்தில் பரபரப்பு
நிலப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் கார் முன்பு ஆசாமி ஒருவர் திடீரென்று அமர்ந்து போராட்டம் நடத்தியதால் தலைமைச்செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.3 கோடி; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. விவசாயிகளின் நலனுக்காக ரூ.61.09 கோடி மதிப்பில் தொகுப்பு திட்டம்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தைத் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.