மாநில செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது + "||" + Water flow to Hogenakkal was reduced to 32 thousand cubic feet per second

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடிக்கிறது.
தர்மபுரி, 

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. 

அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,565 கன அடியாக குறைவு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.56 அடியாக உயர்ந்துள்ளது.
2. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 13,500 கன அடியாக உயர்வு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 கன அடியாக உள்ளது.
3. மேட்டூர் அணை நீர்வரத்து 20,500 கன அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
4. ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு; குளிக்கவும், பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக குறைவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.