தீபாவளி பண்டிகை: திண்டுக்கல் மாவட்டத்தில் களைகட்டிய வாரச்சந்தை


தீபாவளி பண்டிகை: திண்டுக்கல் மாவட்டத்தில் களைகட்டிய வாரச்சந்தை
x
தினத்தந்தி 28 Oct 2021 9:12 AM GMT (Updated: 28 Oct 2021 9:12 AM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரச்சந்தையில் விற்பனை களைகட்டியது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள அய்யலூரில் தீபாவளியை முன்னிட்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர். சந்தைக்குள் இடம் இல்லாததால், சந்தைக்கு வெளியே சாலை வரை கூட்டம் அலைமோதியது.

ஒரு கிலோ நாட்டுக் கோழி ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையிலும், செம்மறி ஆடுகள் ரூ.4,500 முதல் ரூ.5,500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. 

ஒரே நாளில் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் தீபாவளியை முன்னிட்டு ஆடுகளின் வரத்து அதிகம் இருந்ததால் கடந்த வாரங்களை காட்டிலும் தற்போது விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story