மதுரையில் தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை


மதுரையில் தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 29 Oct 2021 4:46 AM GMT (Updated: 29 Oct 2021 4:46 AM GMT)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை: 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 53 வது குருபூஜை சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை தொடங்கின.


மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு சசிகலா இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பகுளம் மருதுபாண்டியர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவிப்பதற்காக தேர்தல் பிரச்சார  வாகனத்தில்  சசிகலா வந்தார். இது ஜெயலலிதா பயன்படுத்தியது. அதில் அ.தி.மு.க கட்சி கொடி பொருத்தப்பட்டு இருந்தது.

கோரிப்பாளையத்துக்கு வந்தபோது சசிகலாவின் வாகனம் செல்லூர் வழியாக தேவர் சிலைக்கு வந்தது. அங்கு செல்லூர் ராஜுவின் வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா பச்சை நிற சேலை அணிந்து வந்திருந்தார். அவர் நேரில் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக காணப்பட்டார். இருந்தபோதிலும் சசிகலா படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறி சென்று  தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தெப்பக்குளம் மருது பாண்டியர் சிலைக்கு சசிகலாவின் வாகனம் வந்த போது நான்குமுனை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது சூடம் ஏற்றி கற்பூர ஆரத்தி வழிபாடும் நடத்தினார்.

கோரிப்பாளையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் அமமுகவினர் ஏராளமானோர் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

Next Story