கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி திறப்பு


கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி திறப்பு
x
தினத்தந்தி 29 Oct 2021 3:05 PM GMT (Updated: 29 Oct 2021 3:05 PM GMT)

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை நவம்பர் 1 ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சென்னை,

சென்னை கோயம்பேடு புறநகர பேருந்து நிலைய சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் கடந்த 29.09.2015 அன்று தொடங்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. 

இதே போல், வேளச்சேரி-தரமணி, வேளச்சேரி-நெய்வேலி சாலைகளை இணைக்கும் வகையில் 108 கோடி ரூபாய் செலவில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி, கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதி கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த மேம்பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 1 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story