தீபாவளி பண்டிகை: எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


தீபாவளி பண்டிகை: எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2021 11:22 PM GMT (Updated: 29 Oct 2021 11:22 PM GMT)

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கீழ்க்கண்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்படுகிறது.

* கோவை-நாகர்கோவில் (வண்டி எண்: 02668) சிறப்பு ரெயிலில் வருகிற இன்று (30-ந்தேதி) முதல் நவம்பர் மாதம் 8-ந்தேதி வரை 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2-ம் வகுப்பு பொது பெட்டி ஒன்றும் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக நாகர்கோவில்-கோவை (02667) இடையே வருகிற 31-ந்தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.

* கோவை-மன்னார்குடி-கோவை (06616/06615) இடையே நவம்பர் 2-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.

* கோவை-மயிலாடுதுறை-கோவை (02084/02083) இடையே நவம்பர் 1, 3, 7-ந்தேதிகளில் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.

* கோவை-ராமேசுவரம் (06618) இடையே நவம்பர் 2-ந்தேதியும், ராமேசுவரம்-கோவை (06617) இடையே நவம்பர் 3-ந்தேதியும் ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

* தூத்துக்குடி-எழும்பூர் (02694) இடையே இன்று முதல் நவம்பர் மாதம் 7-ந்தேதி வரையிலும், எழும்பூர்-தூத்துக்குடி (02693) இடையே நவம்பர் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.

* எழும்பூர்-கன்னியாகுமரி (02633) இடையே வருகிற 31-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரையிலும், கன்னியாகுமரி-எழும்பூர் (02634) இடையே நவம்பர் 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையிலும், ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.

* ராமேசுவரம்-எழும்பூர் (02206) இடையே வருகிற 31-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரையிலும், எழும்பூர்-ராமேசுவரம் (02205) இடையே வருகிற 31-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு பொது பெட்டி ஒன்று கூடுதலாக சேர்த்து இயக்கப்படும்.

* எழும்பூர்-கொல்லம் (06723) இடையே நவம்பர் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலும், கொல்லம்-எழும்பூர் (06724) இடையே நவம்பர் 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையிலும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.

* ராமேசுவரம்-எழும்பூர் (06852) இடையே வருகிற 31-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரையிலும், எழும்பூர்-ராமேசுவரம் (06851) இடையே நவம்பர் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு பொதுபெட்டி ஒன்று கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.

* தஞ்சாவூர்-எழும்பூர் (06866) இடையே வருகிற 31-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரையிலும், எழும்பூர்-தஞ்சாவூர் (06865) இடையே நவம்பர் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையிலும், 2-ம் வகுப்பு பொது பெட்டி ஒன்று கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story