தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 30 Oct 2021 5:37 AM GMT (Updated: 30 Oct 2021 7:22 AM GMT)

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.


நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழா நடைபெற்றது.

பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழக அரசின் சார்பில் முதல்- அமைச்சர்  மு.க. ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.



முன்னதாக, முதல்-அமைச்சர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்-அமைச்சருடன்  அமைச்சர்கள்  தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.

Next Story