பெரியகுளத்தில் தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை


பெரியகுளத்தில் தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
x
தினத்தந்தி 30 Oct 2021 8:09 AM GMT (Updated: 30 Oct 2021 8:12 AM GMT)

பெரியகுளத்தில் தேவர் சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவையொட்டி பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது மலர் கிரீடமும் அணிவித்தார். பின்னர் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story