மாநில செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.18 லட்சம் பறிமுதல் + "||" + Anti corruption raid on government offices Rs 18 lakh confiscated

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.18 லட்சம் பறிமுதல்

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.18 லட்சம் பறிமுதல்
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனயில் கணக்கில் வராத 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகம் முழுவதும் 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மின்வாரியம், பத்திரப்பதிவு, டாஸ்மாக், காவல்நிலையம் உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையில் கணக்கில் வராத 18 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சோதனையின் போது 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள், 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு பெட்டிகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த ஆண்டு தீபாவளி காலகட்டத்தில் 54 அரசு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகளின் போது 4 கோடியே 28 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னையில் பணியாற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தீபாவளி வசூல் வேட்டையை தடுக்க அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
3. இளங்கோவன் வீட்டில் இருந்து 21.2 கிலோ தங்கம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை
ஆர்.இளங்கோவன் அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார்.
4. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
5. அரசு அலுவலகங்களில் தமிழ் மணம் கமழட்டும்!
தமிழ்நாட்டில், பொதுமக்கள் அரசின் அனைத்து அலுவலகங்களோடும் தொடர்பில் இருக்கிறார்கள். எனவே, அரசு அலுவலகங்களில் முழுமையாக தமிழ் மணம் கமழ்ந்தால்தான், பொதுமக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதனால்தான், தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956-ம் ஆண்டு இயற்றப்பட்டு 23-1-1957-ல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.