மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 Nov 2021 5:56 AM GMT (Updated: 1 Nov 2021 5:56 AM GMT)

சென்னை மடுவின்கரை பள்ளியில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்து வரவேற்றார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன.

பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிக்கூடங்கள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில்,  சென்னை மடுவின்கரை பள்ளியில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்து வரவேற்றார். பின்னர் மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்தது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.

Next Story