மாநில செய்திகள்

கனமழை: திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்பட 5 மாவட்டங்கள், கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை + "||" + Heavy rains: Holidays for schools in Kodaikanal, 5 districts including Thiruvannamalai and Perambalur

கனமழை: திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்பட 5 மாவட்டங்கள், கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை:  திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்பட 5 மாவட்டங்கள், கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்பட 5 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


சென்னை,

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வருகிற நவம்பர் 3ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.  எனினும், கடலூரில் தொடர் கனமழையால் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.  இதுபற்றி கடலூர் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.

கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.  கடலூர்  மற்றும் விழுப்புரத்தில் தொடர் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று மழை எதிரொலியாக திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொடைக்கானலில் கனமழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது என திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்; தமிழகத்தில்-146, சென்னையில்-70 தெருக்கள்
தமிழகத்தில் மொத்தம் 146 தெருக்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
2. கொரோனா பரவல்; 6 நாட்களுக்கு ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கொரோனா பரவலை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு 4 ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
3. எங்கள் ஆட்சியில் 2 முதல்-மந்திரிகள், 3 துணை முதல்-மந்திரிகள்... ஓவைசி அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் நாங்கள் ஆட்சியை பிடித்தால் 2 முதல்-மந்திரிகள் மற்றும் 3 துணை முதல்-மந்திரிகள் இருப்பார்கள் என ஓவைசி கூறியுள்ளார்.
4. இனி அதிகாரியிடம் காத்திருக்க தேவையில்லை சென்னை போலீசார் விடுமுறைக்கு விண்ணப்பிக்க ‘செயலி’
சென்னை போலீசார் விடுமுறைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
5. பொங்கல் பரிசு புகார்; காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்-அமைச்சர் எச்சரிக்கை
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் புகாருக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.