மாநில செய்திகள்

கனமழை: சென்னை உள்பட 8 மாவட்டங்கள், கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை + "||" + Heavy rain: Holidays for schools in Kodaikanal, 8 districts including Chennai

கனமழை: சென்னை உள்பட 8 மாவட்டங்கள், கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை:  சென்னை உள்பட 8 மாவட்டங்கள், கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மயிலாடுதுறை உள்பட 8 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வருகிற நவம்பர் 3ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.  எனினும், கடலூரில் தொடர் கனமழையால் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.  இதுபற்றி கடலூர் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.

கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.  கடலூர்  மற்றும் விழுப்புரத்தில் தொடர் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று மழை எதிரொலியாக திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், கொடைக்கானலில் கனமழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது என திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிக்பாஸ் அல்டிமேட்... ஒரே நாளில் 2 போட்டியாளர்கள் அறிவிப்பு
பிக்பாஸ் அல்டிமேட் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் 2 போட்டியாளர்களை பற்றிய விவரங்களை அறிவித்திருக்கிறார்கள்.
2. சென்னை மாநகராட்சி தேர்தல்: எந்தெந்த வார்டுக்கு எங்கு வேட்பு மனு தாக்கல்? ககன்தீப்சிங் பேடி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் எந்தெந்த இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவித்துள்ளார்.
3. சந்தைகளில் விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசிகள்...!
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
4. 13 நகர்ப்புற உள்ளாட்சிகளில் புதிய பஸ் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல்
காஞ்சீபுரம், கடலூர் உள்பட 13 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
5. வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு
நட்டி நட்ராஜ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு திரில்லர் படமாக உருவாகி வரும் வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.