மாநில செய்திகள்

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து + "||" + Name of the AIADMK General Secretary Sasikala Deepavali Greetings

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து
இருள் விலகி ஒளி பிறக்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெயரில் சசிகலா மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெர்வித்து உள்ளார்.
சென்னை

 அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தொண்டர்களுக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறார் தற்போது  சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

அறிக்கையில் சசிகலா கூறப்பட்டிருப்பதாவது:-

இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளித் திருநாளில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் தடுப்பூசியையும் தவறாமல் செலுத்திக் கொண்டு கவனமாக சந்தோசத்துடன் இந்த தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம்.

இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அமைதியும் அன்பும் தழைக்கட்டும், வேற்றுமையில் ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிம்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
2. அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - கடம்பூர் ராஜு
அதிமுகவில் இனி இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
3. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை...
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
4. திராவிட கட்சியினர் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வது இல்லை? வைகோ விளக்கம்
திராவிட கட்சியினர் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வது இல்லை? என்பதற்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
5. விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்
விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் என சசிகலா குறிப்பிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.