முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 3 Nov 2021 6:29 PM GMT (Updated: 3 Nov 2021 6:29 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் இன்று பகல் 12 மணி வரை 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 986 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருவதால் பகல் 12 மணிக்கு பிறகு மேலும் 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 3,981 கனஅடி வீதம் கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 83 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 305 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Next Story