மாநில செய்திகள்

தொழிலதிபரை கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கு: போலீஸ் அதிகாரிகளின் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதி + "||" + Businessman kidnapping and writing off property: Permission to withdraw pre-bail petition of police officers

தொழிலதிபரை கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கு: போலீஸ் அதிகாரிகளின் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதி

தொழிலதிபரை கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கு: போலீஸ் அதிகாரிகளின் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதி
தொழிலதிபரை குடும்பத்துடன் கடத்திச்சென்று சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனு போலீஸ் அதிகாரிகள் தரப்பில் திரும்ப பெறப்பட்டது.
சென்னை,

கடந்த 2019-ம் ஆண்டு சென்னை முகப்பேரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற தொழிலதிபரை அவரது குடும்பத்தினருடன் கடத்திச் சென்று பண்ணை வீட்டில் அடைத்துவைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் ஒரு கும்பல் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ராஜேஷ் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.


இந்த வழக்கில் கோடம்பாக்கம் ஸ்ரீ, திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் 3 போலீஸ்காரர்கள் என்று மொத்தம் 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் கோடம்பாக்கம் ஸ்ரீ மட்டும் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை போலீசார் கைது செய்யவில்லை.

முன்ஜாமீன்

இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு போலீஸ் அதிகாரிகள் பாண்டியராஜன், கிரி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உதவி கமிஷனர் உள்பட 6 பேரை அரசு பணியிடை நீக்கம் செய்யவில்லை. அவர்களை கைது செய்யவும் இல்லை என்று நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, எழுதிவாங்கிய சொத்துகளை மீண்டும் புகார்தாரர் பெயருக்கு எழுதிக்கொடுக்க வேண்டும். போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘குற்றச்செயலில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உதவி கமிஷனரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

அதிகாரிகளின் உத்தரவு

அதையடுத்து நீதிபதி, சொத்து புகார்தாரர் பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதி, பணம் கொடுத்து சொத்து வாங்கியவர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதுதான் இந்த ஐகோர்ட்டின் எண்ணம் என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட முதல் இரு நபர்களுக்கு இந்த ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. 2 பேருக்கு மாவட்ட கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகளின் உத்தரவின்படிதான் மனுதாரர்கள் செயல்பட்டுள்ளனர். சொத்துகளை எழுதி வாங்கிய விவகாரத்தில் மனுதாரர்களுக்கு தொடர்பு இல்லை’ என்று வாதிட்டார்.

திரும்ப பெற அனுமதி

அதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘போலீஸ் அதிகாரிகளான மனுதாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது’ என்றார். அதையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு மனுவை திரும்ப பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தின விழா; 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 24 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
2. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் நஞ்சான உணவை சாப்பிட்ட 31 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மராட்டியத்தின் புனே நகரில் உள்ள பயிற்சி மைய மாணவிகள் 31 பேர் நஞ்சான உணவை சாப்பிட்டதில் உடல்நல பாதிப்பு அடைந்து உள்ளனர்.
4. சென்னை போர் நினைவுச்சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், சென்னை போர் நினைவுச்சின்னம் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படும் என்று ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கூறினார்.
5. இந்தியாவில் பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை
இந்தியாவில் பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.