மாநில செய்திகள்

அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்க தீபாவளி வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி + "||" + Edappadi Palanisamy and O Panneerselvam Wishes TN People on Diwali Festival

அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்க தீபாவளி வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி

அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்க தீபாவளி வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை-ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழ்நாடு மக்களுக்கு அதிமுக இணை-ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நன்மைக்காக தீமையே உருவான நரகாசுரனை அழித்து மக்களை காத்த தீபாவளி திருநாளில்,அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விடவும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.தீபாவளியை உற்சாகத்துடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தீப ஒளித்திருநாளில் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இன்று பெருகும் இன்பம் என்றும் நிலைக்கட்டும். தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் இத்தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ எனது தீபாவளி நல்வாழ்த்துகள்!’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை - அமைச்சர் நாசர் பேட்டி
தீபாவளிக்கு இதுவரை இல்லாத வகையில் ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
2. காஷ்மீர்: வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
3. அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் - ராகுல்காந்தி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. ‘தீபாவளி பண்டிகை எனக்கு ஸ்பெஷல்' -தீபிகா படுகோனே
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
5. தீபாவளி தினத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது. தீபாவளித் திருநாளில் இல்லத்தில் செய்யப்பட வேண்டிய பூஜைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.