செல்போனில் ஆபாச படம் பார்ப்பவரா?- உஷார்.. உஷார்


செல்போனில் ஆபாச படம் பார்ப்பவரா?- உஷார்.. உஷார்
x
தினத்தந்தி 4 Nov 2021 10:18 AM GMT (Updated: 4 Nov 2021 10:18 AM GMT)

ஆபாச படம் பார்ப்பதை பயன்படுத்தி வங்கி அதிகாரியின் கணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

கரூர்

கரூர் வங்கி ஒன்றில்  உதவி மேலாளராக ஒரு பெண் அதிகாரி பணியாற்றி வருகிறார். அவரது கணவர் சமீபத்தில் தனது செல்போனில் ஆபாசப் படம் ஒன்றை பார்த்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு ஒரு ஆபாச மெசேஜ் வந்துள்ளது. அதில் அடையாளம் தெரியாத பெண்ணின் ஆபாச படம் வந்துள்ளது. இதைப்பார்த்த அவர் யார் மெசேஜ் அனுப்பியது என்றுத் தெரியாமல் குழம்பிப்போயுள்ளார்.


சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம ஆசாமி செல்போனில் உனக்கு அனுப்பிய படம் எப்படி இருக்கு, உனக்கு அனுப்பிய படத்தைப் போல உனது மனைவியின் ஆபாச படத்தையும் வலைதளத்தில் அனுப்புவேன். என்று கூறியுள்ளார்.

மனைவியின் ஆபாசப்படத்தை மார்ப் செய்து அனுப்பவா மிரட்டிய நபர் இதனால் அதிர்ந்துபோன கணவர் நீ யார் எனக்கு ஏன் போன் செய்கிறாய் எனக்கேட்டுள்ளார். "நான் யாரா? ஆன்லைனில் ஆபாசப்படம் பார்த்தாயே மறந்துப்போச்சா அடுத்த வீட்டுப்பெண்கள் என்றால் இனிக்குதா? நீ பார்த்த ஆபாச வலைதளம் ஃபிஷிங் வலைதளம், அது உன் டேட்டா, உன் வீட்டில் உள்ளவர்கள் அனைத்து புகைப்படங்கள் அனைத்தையும் எங்களுக்கு தந்துவிட்டது.

இப்ப பார்த்த ஆபாசப்படம் போல் உன் மனைவியின் படத்தை மற்றவர்களுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும், உன் மனைவி வங்கி அதிகாரி, மானம் போய்விடும், அப்புறம் எங்கே வேலைக்கு போவார் குடும்பத்தோட தற்கொலைதான் என்று மிரட்டிய அவர் அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் எனக்கு நீ பணம் தர வேண்டும்" என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துப்போன வங்கி அதிகாரியின் கணவர் கூகுள் பே மூலம் போனில் மிரட்டிய மர்ம ஆசாமியின் கணக்குக்கு ரூ 49 ஆயிரம் அனுப்பியுள்ளார். அவர் பணம் அனுப்பியும் மீண்டும் மீண்டும் மிரட்டியுள்ளனர். கணவர் ஏதோ மன உளைச்சலில் இருப்பதை கண்டுபிடித்த பெண் வங்கி அதிகாரி விவரம் கேட்க சபலத்தால் தான் ஆன்லைனில் ஆபாச படம் பார்த்ததையும் அதைத் திடர்ந்து வந்த மிரட்டல் கால், தான் ரூ.49000 அனுப்பியது உள்ளிட்ட அனைத்தையும் சொல்லியுள்ளார்.

 உடனடியாக பெண் அதிகாரி சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக அவர்கள் பேசிய செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு சைபர் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் வங்கி உதவி மேலாளரின் கணவர் லோகாண்டா என்ற இணைய தளத்தில் ஆபாச விளம்பரம் பார்த்துள்ளார். அதில் அவர்கள் கேட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவருடைய செல்போன் எண்ணை வைத்தும், அதன் தகவல்களை திரட்டி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை சேகரித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் பேசிய செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு சைபர் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் வங்கி உதவி மேலாளரின் கணவர் லோகாண்டா என்ற இணைய தளத்தில் ஆபாச விளம்பரம் பார்த்துள்ளார். அதில் அவர்கள் கேட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவருடைய செல்போன் எண்ணை வைத்தும், அதன் தகவல்களை திரட்டி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை சேகரித்துள்ளனர். 

பின்னர் வங்கி அதிகாரியின் கணவரின் செல்போன் எண்ணிற்கு இணைய தளத்தில் உள்ள ஆபாச புகைப்படங்களை எடுத்து அதில் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது போன்று உன் மனைவியின் ஆபாச புகைப்படத்தையும் மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளி விட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். அவ்வாறு வெளியிடாமல் இருக்க 49000 ரூபாய் கூகுள் பே மூலம்  அனுப்பும் படி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவர் 49000 ரூபாய் அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்தது.

இதற்கு பயன்படுத்திய செல்போன் எண்கள், வங்கி கணக்கு ஆகியவற்றை கண்டறிந்த சைபர் கிரைம் போலீசார் பொள்ளாச்சியை சார்ந்த 2சிவில் இன்ஜினியராக பணியாற்றும் பிரசாந்த் என்ற 27 வயது இளைஞரையும், அவருக்கு உதவியாக இருந்த அஜீத் குமார்(49) என்கின்ற கொத்தனாரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரொக்கம், இரு சக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story