மாநில செய்திகள்

தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை - அமைச்சர் நாசர் பேட்டி + "||" + Aavin products sold for Rs 83 crore for Diwali - Minister Nasser interview

தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை - அமைச்சர் நாசர் பேட்டி

தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை - அமைச்சர் நாசர் பேட்டி
தீபாவளிக்கு இதுவரை இல்லாத வகையில் ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஆவின் நிறுவனம் வரலாற்றில் இல்லாத அளவில், தீபாவளி விற்பனை அமைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 83 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஆவின் விற்பனை ரூ.55 கோடியாகத்தான் இருந்தது.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஆவின் நெய் 600 டன் விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு 900 டன் விற்பனை ஆகியுள்ளது. இனிப்பு வகைகளை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 400 டன் விற்பனை ஆகியுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.330 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கி உள்ளனர். 27 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு தினமும் ஆவின் பால் விநியோகிக்கப்படுவதால், பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஆவின் பொருட்கள் பற்றிய விளம்பரம் ஒரே நேரத்தில் 27 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் நேரடியாக சென்றடைந்துள்ளது.

அடுத்தவாரம் சிங்கப்பூருக்கு ஆவின் பொருட்களை அளிக்க உள்ளோம். மிக விரைவில் பக்கத்து மாநிலம் மற்றும் நாடுகளுக்கும் ஆவின் பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
2. அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்க தீபாவளி வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை-ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் - ராகுல்காந்தி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. ‘தீபாவளி பண்டிகை எனக்கு ஸ்பெஷல்' -தீபிகா படுகோனே
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
5. தீபாவளி தினத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது. தீபாவளித் திருநாளில் இல்லத்தில் செய்யப்பட வேண்டிய பூஜைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.