மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை - தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டுகோள்


மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை - தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Nov 2021 6:03 PM GMT (Updated: 5 Nov 2021 6:03 PM GMT)

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

சென்னை,

கொரோனா காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு தாமதாக நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகளும் 45 நாட்களுக்குப் பிறகே வெளியானது. கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகி 2 நாட்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. 

இதற்கிடையில் வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை ஐகோர்ட்டு மதுரைக்கிளை ரத்து செய்ததன் காரணமாக, மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்க முடியாமல் மருத்துவ கல்வி இயக்குனரகம் உள்ளதாக கூறப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்காக பல்வேறு பணிகள் உள்ள நிலையில், தமிழக அரசு விரைந்து முடிவெடுத்தால் மட்டுமே அடுத்தகட்ட அறிவிப்புகளை வழங்க முடியும் என மருத்துவ கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story