மாநில செய்திகள்

விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் + "||" + I will meet everyone in person soon. Letter to Sasikala volunteers

விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்

விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்
விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் என சசிகலா குறிப்பிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்திய பேரியக்கம் நம் புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும் வளர்த்தெடுக்கபட்ட ஒரு இயக்கம் ஆகும், ஏழை, எளியவர்களின் வாழ்வு வளம் பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழி வந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், தாங்கள் வாழுகின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவர்களது, வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கும், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன், என சசிகலா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பரிசு வினியோகத்தில் ரூ.500 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. வழக்கு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் சுமார் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளார்.
2. விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி: டெல்டா மாவட்டங்களில் 22-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி: டெல்டா மாவட்டங்களில் 22-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
3. அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - கடம்பூர் ராஜு
அதிமுகவில் இனி இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
4. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை...
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
5. அ.தி.மு.க. தலைமை தேர்தல் - பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெறுகிறது.