தஞ்சாவூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - பொதுமக்கள் அவதி


தஞ்சாவூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 6 Nov 2021 6:18 PM GMT (Updated: 2021-11-06T23:48:54+05:30)

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தரைப்பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள ரெட்டவயல் சாலை குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்காலிகமாக மணல் பாதை அமைத்து வாகனங்கள் சென்று வந்த நிலையில், கனமழையால் தற்காலிக பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. 

இதனால் அந்த பாதையை பயன்படுத்தி வந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அன்றாடம் அந்த வழியாக வேலைக்குச் சென்று வருபவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே உடனடியாக பாலத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story