10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச்செயலாளர் உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Nov 2021 7:31 PM GMT (Updated: 6 Nov 2021 7:31 PM GMT)

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில்துறை கூடுதல் தலைமைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். தொழில்துறை முதன்மைச்செயலாளர் என்.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக முன்னாள் கூடுதல் செயலாளர் பி.அமுதா, அந்தப்பணியில் இருந்து திரும்பியதை தொடர்ந்து தமிழக ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டார்.

பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தயானந்த் கட்டாரியா, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, எரிசக்தித்துறை முதன்மைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

எரிசக்தித்துறை முதன்மைச்செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி, கைவினை, ஜவுளி மற்றும் காதித்துறை முதன்மைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தறி, கைவினை, ஜவுளி மற்றும் காதித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டார்.

கைத்தறி மற்றும் ஜவுளி ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், நிலச்சீர்திருத்த ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story