மாநில செய்திகள்

சென்னை: மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு + "||" + Chennai: Announcement of helpline numbers for reporting rain and flood related complaints

சென்னை: மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

வங்க கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னையில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சென்னையில் பல இடங்களில் 10செ.மீ-க்கு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 14செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. 1913, 04425619206, 04425619207, 04425619208, ஆகிய எண்ணிற்கு கால் செய்தும், 9445477205 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்த பிரபல ரவுடி படப்பை குணா!
குணா மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல், ஆள்கடத்தல் என 24 வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்து வந்தார்.
2. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; அரசாணை வெளியீடு!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
3. சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை
சென்னையில் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
4. பக்தர்களுக்கு தரமான அன்னதானம் வினியோகம்: 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டு!
பக்தர்களுக்கு தரமான அன்னதானம் வழங்கிய 314 கோவில்களுக்கு இந்திய உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனம் தர சான்றிதழ் வழங்கியுள்ளது.
5. சென்னையில் 28 பூங்கா திட்டப் பணிகளுக்கு ரூ. 24.43 கோடி ஒதுக்கீடு
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 28 புதிய பூங்கா திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.