மாநில செய்திகள்

நீடிக்கும் கனமழை; சென்னைக்கு ரெட் அலர்ட்! + "||" + Prolonged heavy rain; Red Alert for Chennai!

நீடிக்கும் கனமழை; சென்னைக்கு ரெட் அலர்ட்!

நீடிக்கும் கனமழை; சென்னைக்கு ரெட் அலர்ட்!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை மேலும் 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுத்தும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது.

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னையில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு விதிமீறல்: சென்னையில் 70 வழக்குகள் பதிவு, 173 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. டெல்டா, தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...!
டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. சென்னையில் மாவட்ட கபடி போட்டி 3 நாட்கள் நடக்கிறது
சென்னையில் மாவட்ட கபடி போட்டி 3 நாட்கள் நடக்க இருக்கிறது.
4. ஜம்மு- காஷ்மீரில் மிக கனமழை, பனிப்பொழிவிற்கான ‘ரெட் அலர்ட்’
ஜம்மு-காஷ்மீரில் மிக கனமழை மற்றும் பனிப்பொழிவிற்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வாளர் இன்று அறிவித்தார்.
5. இன்று முதல் இரவு ஊரடங்கு: சென்னையில் 10,000 போலீசார் பாதுகாப்பு!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்படுகிறது.