மாநில செய்திகள்

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றம் மாநகராட்சி நடவடிக்கை + "||" + Exhaust corporation action by giant motor of rainwater accumulated in the tunnel

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றம் மாநகராட்சி நடவடிக்கை

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றம் மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் கனமழையால் சுரங்கப்பாதைகளில் தேங்கி நின்ற மழைநீரை ராட்சத மோட்டார் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.
சென்னை,

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முக்கிய சுரங்கப்பாதைகளான வியாசர்பாடி, கணேசபுரம், மேட்லி ஆகியவற்றில் மழைநீர் சூழ்ந்ததால் அந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

மேலும் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்தை மாற்றி போலீசார் அறிவித்தனர். சில சாலைகளில் பள்ளங்கள் இருந்ததால் அந்த பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் 16 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. இந்த சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


ராட்சத மோட்டார்

மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் மழைநீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். மழைநீரை வெளியேற்ற அதிக குதிரை திறன் கொண்ட ராட்சத மோட்டார் கொண்டு வரப்பட்டு சுரங்கப்பாதையில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டது.

கணேசபுரம், மேட்லி, ரங்கராஜபுரம் சுரங்கபாதைகளில் இருந்த மழைநீர் நேற்று முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. இதையடுத்து அந்த சுரங்கப்பாதைகள் வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

சென்னையில் மழைநீர் தேங்கிய 16 சுரங்கப்பாதைகளில் 14 இடங்களில் தேங்கி இருந்த மழைநீரை ராட்சத மோட்டார் கொண்டு வெளியேற்றப்பட்டதால் அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு அனைத்தும் சரி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் குறித்து ஆலோசனை: தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
பொங்கல் பரிசு தொகுப்புக்கு தரமற்ற பொருட்கள் வினியோகம் செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. சென்னை மின்சார ரெயில்களில்: 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரின் பயணம் ரத்து
சென்னை மின்சார ரெயில்களில்: 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரின் பயணம் ரத்து அதிகாரிகள் நடவடிக்கை.
4. பொங்கல் திருநாளை முன்னிட்டு பணியாளர்களுக்கு ரூ.7 கோடி சாதனை ஊக்கத்தொகை போக்குவரத்து துறை நடவடிக்கை
பொங்கல் திருநாளை முன்னிட்டு 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ரூ.7 கோடியே 1 லட்சம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
5. அண்ணா மீது ஆணை: “தி.மு.க.வை சேர்ந்தவர்களே தவறு செய்தாலும் நடவடிக்கை” - மு.க.ஸ்டாலின் உறுதி
தி.மு.க.வை சேர்ந்தவர்கள் யார் தவறு செய்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.