நாகையில் கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலம்!


நாகையில் கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலம்!
x
தினத்தந்தி 10 Nov 2021 5:23 AM GMT (Updated: 10 Nov 2021 5:23 AM GMT)

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

நாகை,

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று காலை முதல் இடைவிடாது அடைமழையாக பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் பாலையூர் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விளைநிலங்கள் தண்ணீர் மூழ்கி கடல் போல் காட்சி அளிக்கின்றனர். 

மழை நின்றால் தான் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடியும். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றால் பயிர்கள் அழுகத்தொடங்கி விடும். இதனால் விவசாயிகள் கவலையுடன் காணப்படுகின்றனர். நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது வரை 31 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story