கனமழையை எதிர்கொள்ள தயார் - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி


கனமழையை எதிர்கொள்ள தயார் - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
x
தினத்தந்தி 10 Nov 2021 6:41 AM GMT (Updated: 2021-11-10T12:11:29+05:30)

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை,

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளம் வடியாத இடங்களில் விரைவில் தண்ணீரை வெளியேற்ற முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரில் அதிகமான இடங்களில் படகுகளை தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறோம். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மழை நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்களை கூடுதலாக பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story