மாநில செய்திகள்

கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் அபராதம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Penalty for using humans to clean up waste: ICC court orders Tamil Nadu government

கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் அபராதம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் அபராதம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மனிதர்களை கொண்டு கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும்விதமாக மனுதாரர் தரப்பில் பல ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஆலோசனைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை' என்று கூறப்பட்டு இருந்தது.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கழிவுகளை அகற்றும் பணியில் இதுநாள்வரை ஈடுபட்டவர்களுக்கு, மாற்று வேலை உள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும்போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

கழிவுகளை மனிதர்கள் அகற்றும் இந்த நடைமுறையை முழுமையாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும், மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்கான வழிவகைகளையும் அரசு உருவாக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் முககவசம் அணியாத 5,997 பேருக்கு ரூ.12½ லட்சம் அபராதம்
சென்னையில் முக கவசம் அணியாத 5 ஆயிரத்து 997 பேருக்கு ரூ.12 லட்சத்து 59 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2. முக கவசம் அபராதம்; ஒரே நாளில் ரூ.2.18 லட்சம் வசூல் - சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னையில் நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாத 1,022 பேரிடம் இருந்து ரூ.2.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
3. டெல்லி: கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக ரூ. 1 கோடிக்கும் மேல் அபராதம்..!
டெல்லியில் நேற்று கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக ரூ. 1 கோடிக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
4. சேவை வரி விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம்
சேவை வரி விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
5. ஒமைக்ரான் எதிரொலி: இத்தாலியில் விதிகளை மீறுவோறுக்கு அபராதம்
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இனி திரையரங்கு, விளையாட்டு நிகழ்வுகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.