தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 12 Nov 2021 5:29 AM GMT (Updated: 2021-11-12T10:59:50+05:30)

தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

உலகமே வியக்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி சதயநட்சத்திரம் அன்று, சதய விழாவாகஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா நவம்பர்-13-ம் தேதி (நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

இந்த விழா வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும், ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல நடப்பு ஆண்டும் ஒருநாள் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story